2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் போட்டியை தொழில்முறையற்ற முறையில் கையாண்டது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையை கண்டித்துள்ளார்.
சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் தொடர்பில் மேலதிகமாக ஒதுக்கப்பட்ட நாளில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளும், அந்த ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே மேலதிக நாளை ஒதுக்க இணங்கியிருந்தன. இந்த தீர்மானம் குறித்தே ரணதுங்க தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்
பலத்த மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு இருந்த போதிலும் ஆசிய கிரிக்கெட் பேரவை (ஏசிசி) கொழும்பின் மைதானங்களை தெரிவு செய்தமையையும் அவர் விமர்சித்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை, கிரிக்கெட்டைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். எனினும் இந்த விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, தொழில் ரீதியாக செயல்படவில்லை என்று ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.