யாழிற்கு 10 நாட்கள் கெடு வைத்த அமைச்சர் டக்ளஸ்!

0
51

யாழ்ப்பாணத்தில் 10 நாட்களுக்குள் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.

 விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (15) வெள்ளிக்கிழமை யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் குறித்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.