போதை பொருள் கும்பலுடன் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். ஐதராபாத்தில் அண்மையில் வெளியான போதை பொருள் விவகாரம் தெலுங்கு திரைப்பட உலகை உலுக்கியது.
இதில் தொடர்பு இருப்பதாக சில நைஜீரிய இளைஞர்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது
தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், நெஞ்சில், சீறு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நவ்தீப் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். நவ்தீப் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய தேடி வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்திருந்தார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள நவ்தீப், “நான் எங்கேயும் தப்பி ஓடவில்லை. ஐதராபாத்தில்தான் இருக்கிறேன். இந்த போதை பொருள் வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருள் வழக்கில் தேடப்படும் நபர் நான் இல்லை. தயவு செய்து உண்மையான தகவலை வெளியிடுங்கள்” என்றார்.