ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

0
176
The dead woman's body. Focus on hand

தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிதர சந்தி பகுதியில் உள்ள அறை ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிரிதர சந்திக்கு அருகாமையில் உள்ள அறை ஒன்றை வாடகைக்கு பெற்ற நபர் ஒருவர் அதனை இளம் ஜோடி ஒன்றுக்கு நேற்று முன்தினம் தங்குவதற்கு வழங்கியுள்ளார்.

மர்மமான முறையில் மரணம்

மறுநாள் சோதனையின் போது, ​​அறையில் தங்கியிருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததும், சம்பவத்தின் பின்னர் மற்றைய நபர் காணாமல் போனதும் தெரியவந்தது.

சுமார் 30 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரேத அறை

சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.