உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் இலங்கை நிறுவனம்?: ரஷ்யா குற்றச்சாட்டு

0
49

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் இலங்கை நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா அரச செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன்படி, இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் இலங்கை நிறுவனம் ரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் காலவதியான இராணுவ உபகரணங்களை போலந்துக்கு அனுப்பி அங்கிருந்து உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ உபகரணங்களில் காணப்படும் இலக்கங்களை மறைத்து புதிய இலக்கங்களுடன் கப்பல் மூலமாக போலந்துக்கு ஆயுதங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவுக்கும் இலங்கைக்குமான உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கொழும்பில் இயங்கிவரும் குறித்த நிறுவனத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் அறிய முயற்சித்த நிலையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் மூன்றாவது ஆண்டை அண்மிக்கும் நிலையில் உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்குவதாக பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஸ்பெய்ன்,பெல்ஜியம் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் இரு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு உதிரான போரில் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.