முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குளம்

0
137

வடக்கின் பல குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படும் இவ்வேளையில் முல்லைத்தீவு – கூழாமுறிப்பு குள புனரமைப்பு பணி விவசாயிகள் உள்ளிட்ட அந்த மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்வரும் 01.12.2023 இற்கு முன்னதாக குளத்தின் புனரமைப்பு பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி குளக்கட்டின் உயரம் மேலும் உயர்த்தப்படும் நிலையில் இதனால் குளத்தின் நீர் கொள்ளும் திறன் மேலும் கூட்டப்படுகிறது.

பெரும்போகத்தில் தோன்றும் இடர்பாடுகள்

முல்லைத்தீவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள முக்கிய குளம் (Photos) | Koolamurippu Pond Reconstruction Works

குளத்தின் சீர்திருத்தப் பணிகளால் பெரும்போகத்தில் மழைவீழ்ச்சி குறைவால் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையால் தோன்றும் இடர்பாடுகள் இனிவரும் காலங்களில் இருக்காது என கமவிதான பதவி நிலை உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த குள புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை தண்டுவான், கோடாலிக்கல்லு, கூழாமுறிப்பு, கரிவேலன்கண்டல், ஒட்டுசுட்டான், கெருடமடு பகுதிகளில் உள்ள குளங்கள் திருத்தப்படுவதுடன் நீர்ப்பாசன கால்வாய்களும் திருத்தப்படுகின்றன.

அடுத்துவரும் வருடங்களில் விவசாய நீர்த்தேவையை பெருமளவில் பூர்த்தி செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery