இராவணன் சிங்கள அரசன்; உளறும் சரத் வீரசேகர!

0
267

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர் என்றும், இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராவணன் சிங்கள மன்னன்; உளறும் சரத் வீரசேகர! | Ravana Was The Sinhalese King Sarath Veerasekhara

  இலங்கை தமிழ் பூர்வீகம் என்பது பொய்

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை.

எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது. மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இராவணன் சிங்கள மன்னன்; உளறும் சரத் வீரசேகர! | Ravana Was The Sinhalese King Sarath Veerasekhara

இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது. இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

இராவணனின் படை கொடியில் சிங்கம்

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது, இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.

இராவணன் சிங்கள மன்னன்; உளறும் சரத் வீரசேகர! | Ravana Was The Sinhalese King Sarath Veerasekhara

அதேசமயம் மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னம் உள்ளது.

இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்கள தலைவர் என்பதே உண்மை என்றும் ரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.