பிழையான சிந்தனையில் இருக்கும் சிங்கள மக்கள்: சி.வி. விக்னேஸ்வரன்

0
226

“வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய பாரம்பரிய நிலம் அல்ல என சிங்கள மக்கள் கூறினால் அவர்களுக்கு உண்மையிலேயே சரித்திரம் தெரியாமலிருக்கின்றது என்று தான் அர்த்தம்” என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (11.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிங்கள மொழி தோன்றியதே கிறிஸ்த்துவுக்கு பின் ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் தான். ஆனால் அதற்கு முன்னதாக தமிழ் இந்த நாட்டிலே இருந்திருக்கின்றது.

ஆகவே இது சிங்கள – பௌத்த நாடு என்றெல்லாம் கூறுவது மிகவும் பிழையான சிந்தனை என தெரிவித்துள்ளார்.