பரபரப்பை ஏற்படுத்திய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் சுவரொட்டிகள்!

0
255

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

கருப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்,

விடுதலை புலிகளின் தலைவரின் சுவரொட்டிகளால் பரபரப்பு! | The Posters Caused A Stir Ampara

அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள்

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை ஞாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் அக்கரப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன