நடைமுறைக்கு வரவுள்ள இலங்கை – ஈரான் பண்டமாற்று முறை ஒப்பந்தம்!

0
155

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த பண்டமாற்று முறை ஒப்பந்தத்திற்கமைவாக இலங்கை, தேயிலை ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளது.

ஈரானில் இருந்து 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின் படி, தேயிலை ஏற்றுமதிக்காக 2021ம் ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நாட்டின் நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஒப்பந்தத்தின் படியான செயற்றிட்டம் தாமதமாகியது.

இதுத் தொடர்பில் இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்துடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னர், தேயிலை ஏற்றுமதிக்கு தேவையானவற்றை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்படப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ், 48 மாத காலப்பகுதியில் மாதாந்த அடிப்படையில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை உத்தேசித்துள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் நோக்கமாக ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள 251 மில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் பட்டியலைத் தீர்ப்பதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.