மண்ணை கவ்வியது ஜப்னா கிங்ஸ் அணி – கண்டி அபார வெற்றி

0
241

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (05) இடம்பெற்ற போட்டியில் பி லவ் கண்டி அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. பி லவ் கண்டி அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நிலையில் ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

பி லவ் கண்டி அணி

மண்ணை கவ்வியது ஜப்னா கிங்ஸ் அணி - கண்டி அபார வெற்றி | Lanka Premier League 2023 Points Table Jaffna King

118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி லவ் கண்டி அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.

பி லவ் கண்டி அணிக்காக தலைவர் வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், ஃபகார் ஜமான் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.