புலி உறுப்பினர் எனக் கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞர்!

0
188

புலம்பெயர் இளைஞன் ஒருவன் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாண இளம் பெண்னை திருமணம் செய்து அந்தப் பெண்ணின் நகைகளையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ‘க..ன்’ என்ற அந்த இளைஞன் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் வசித்து வருகின்றார்.

திருமணம் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆதித்யா மண்டபத்தில் நடைபெற்றது.

சீதனம் என்று கூறி பல இலட்சங்கள்… மாப்பிள்ளை குடும்பத்தாரின் போக்குவரத்துச் செலவுகள் என்று பல இலட்சங்கள் – இப்படி பெருந்தொகைப் பணம் அவருக்கு பெண் தரப்பால் வழங்கப்பட்டது.

Gallery

திருமண சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணுடன் சில வாரங்கள் தங்கியிருந்த அந்த இளைஞன் ஏப்ரல் மாதம் 12ம் திகதி மறுபடியும் ஜேர்மனி சென்றுவிட்டார்.

‘ஒரு மாதத்தல் உன்னை ஜேர்மனிக்கு எடுத்துவிடுவேன்’ என்று கூறி அவர் ஜேர்மனி புறப்படும் போது பெண்ணிடம் இருந்து 20 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார்.

ஜேர்மனி சென்று ஒரு வாரத்தில் தனது புது மனைவியைத் தொடர்பு கொண்ட ‘க…ன்’ என்ற அந்த இளைஞன் தனக்கு ஜேர்மனியில் ஒரு காதலி இருப்பதாகவும் உன்னுடன் வாழ முடியாது என்று கூறியிருக்கின்றார்.

Gallery

அந்த பெண் நீதி கேட்டுப் போராட முற்பட்டபோது தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், வாள்வெட்டுக் குழுவை அனுப்பி குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

இந்தியத் தூதரகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றனவற்றில் தான் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், ஜேர்மன் தூதராலயத்திலும் அந்த நபர் பற்றிய முறைப்பாடுகளைத் தான் வழங்க உள்ளதாகவும் அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார்.

‘எனக்கு நீதி வேணும் அண்ணா. என்னை போல யாழ்பாணத்தில் இனி எந்தப் பெண்ணும் இதுபோல பாதிக்கப்பட கூடாது.’ என்று அந்தப் பெண் கண்ணீரோடு கூறிய வார்தைகள் இப்பொழுதும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. (மனங்களிலும் தான்)