துருக்கியில் சட்டவிரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேர் கைது

0
166

துருக்கிக்கு அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் புலம் பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 16 ஆயிரத்து 18 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் இஸ்தான்புல் நகரில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.