ட்விட்டரில் ஏற்பட்ட மாற்றம்; குருவிக்கு டாட்டா கூறி X என மாற்றிய எலான் மஸ்க்!

0
134

டிவிட்டரின் சின்னமான நீல நிறக் குருவிக்கு பதில் X என தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றினார். டிவிட்டர் ஊடகத்தில் இடம்பெற்றுள்ள நீலக் குருவிக்கு விடைகொடுப்போம் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் மாற்றம் செய்துள்ளார்.

அதன்படி நீல நிற குருவிக்குப் பதில் எக்ஸ் (X) என்ற ஆங்கில எழுத்து டிவிட்டர் வலைதளத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.