வடக்கு குடிமகன்கள் தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட நிபுணர்..

0
155

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (19) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நரம்பியல் சார்ந்த நோய்கள்

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது.

தற்பொழுது வடக்கில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாகவே நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது.

வடக்கு குடிமகன்கள் தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட நிபுணர் | An Expert Who Published Information North People

மதுபாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோல போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.

எனவே, அதிகரித்துள்ள மதுபாவனை மற்றும் போதைபொருள் பாவனையினால் அவர்கள் அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.