கனேடிய குறி சொல்லும் நிபுணர்கள் கூறும் சில நல்ல தகவல்கள்

0
173

குறி சொல்பவர்கள் மந்திரவாதம் செய்வதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது என்கிறார்கள் கனேடிய குறி சொல்லும் நிபுணர்கள் சிலர். சாபம் என்று ஒன்று இல்லவே இல்லை என்கிறார் கனேடிய குறி சொல்லும் நிபுணரான Dino Callefos.

குறி சொல்லுதலை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள், அதைக் குறித்து பயப்படுகிறார்கள் என்று கூறும் Dino, குறி சொல்பவர்கள் மந்திரவாதம் செய்வதாக ஒரு தவறான மருத்து நிலவுகிறது என்கிறார்.

சாபம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கூறும் அவர், ஆனால் மக்கள் இதையெல்லாம் நம்புகிறார்கள் என்கிறார். 

ஆனாலும், உங்களுக்கு ஒரு சாபம் இருக்கிறது, அதை நீக்க எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கள் என்று மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டமும் இருக்கிறது என்று கூறும் Dino, இந்த tarot cards என்னும் அட்டைகள் மூலம் குறி சொல்லும் நோக்கமே, நீங்கள் எந்த பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்கிறார்.

நீங்கள் போகும் பாதையில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றால், அதை நோக்கிச் செல்லும் நீங்கள் அதை தடுக்கலாம், சரி செய்யலாம் என்று கூறும் Dino, இது ஒரு மனோவியல் ஆலோசகரிடம் பேசுவது போலத்தான் என்கிறார்.

இதே கருத்தை ஆமோதிக்கும் ரெஜினா பல்கலை பேராசிரியரான Roger Petryயும், இந்த அட்டைகளைப் பயன்படுத்தி குறி சொல்லும் விடயம், 1780களிலேயே துவங்கியது என்று வரலாறு கூறுவதாக ஒரு தகவலைத் தெரிவிக்கிறார்.