2023 ICC உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா…!

0
331

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மோசமான சூழ்நிலையில் உள்ளதால் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.

இரு நாடுகளும் இருதரப்பு தொடா்களில் விளையாடாத நிலையில் சா்வதேச போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி தருமா என்பது குறத்து தற்போது வரை ஒரு தெளிவான முடிவு வெளிவரவில்லை.

இப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாதில் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டங்களுக்கான இடங்களை மாற்ற வேண்டும் என பிசிபி கோரியுள்ளது. ஆனால் அதை ஐசிசி நிராகரித்து விட்டது.

ஐசிசி இன் நம்பிக்கை

2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா...! | 2023 Cricket World Cup India Vs Pakistan

இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வரும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏனெனில் பங்கேற்பதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதை ஐசிசி மதிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவா் தோ்தலுக்கு, பலுசிஸ்தான் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டு கிரிக்கெட்டில் குழப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.