டொலரின் பெறுமதியின் திடீர் அதிகரிப்பு; வெளியான தகவல்

0
189

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான வேறுபாடுகளினால் டொலரின் பெறுமதியில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதியின் திடீர் அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் | 1 Dollar In Sri Lankan Rupees Today Black Market

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி, ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 335 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்முதல் விலை 331 ரூபாவாக காணப்பட்டது.

டொலரின் பெறுமதியின் திடீர் அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் | 1 Dollar In Sri Lankan Rupees Today Black Market

ஆனால் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 318.99 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை, கொள்வனவு விலை 303.19 ரூபாயாக பதிவாகியுள்ளது.

எனினும் டொலரின் ஏற்ற இறக்கம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

மத்திய வங்கி அண்மையில் 03 பில்லியன் டொலர்களை கையகப்படுத்தியுள்ளது. இதனால், டொலர் மதிப்பு தற்போதைய நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது. இல்லையெனில், டொலர் மதிப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அவர் மேலும் கூறினார்.