யூடியூப் நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி…

0
117

உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனலில் இனிமேல் 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என அந்த நிறுவனம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: மகிழ்ச்சியான செய்தி | A New Update Released By Youtube Happy News

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைவரையும் கவர்ந்த ஒரு தளமாக யூடியூப் இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில், யூடியூப் தளத்தில் எளிதாக பணம் சம்பாதிக்கும் முறையை தற்போது யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: மகிழ்ச்சியான செய்தி | A New Update Released By Youtube Happy News

அந்தவகையில் யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது 1000 சந்தாதாரர்கள் என்பதற்கு பதிலாக 500 சந்தாதாரர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை யூடியூப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும். குறித்த வசதி தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.