தாக்குதலுக்கு தயாரான 9570 அணு ஆயுதங்கள் – சீனாவின் திட்டம்

0
368

சீனா தன்னுடைய அணு ஆயுதங்களை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவிலான அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளுடனும் சீனா மோதல் போக்கினை கொண்டுள்ள சூழலில் உலகளவில் இவ்விடயம் குறித்து பேசப்பட்டு வருகின்றது. அவ்வகையில், சீனாவிடம் காணப்படும் அணு ஆயுதங்கள் 350 – 410 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு ஆயுத பயன்பாடு

தாக்குதலுக்கு தயாரான 9570 அணு ஆயுதங்கள் - சீனாவின் திட்டம் | China Has Increased The Number Of Nuclear Weapons

இதுகுறித்து, ஸ்டோக்கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டான் ஸ்மித் குறிப்பிடுகையில் சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்கள் குறைந்துகொண்டு வருவது ஒரு நன்மையான விடயம் என தெரிவித்துள்ளார்.

அதன்படி சர்வதேச அளவில் 09 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 12010 அணு ஆயுதங்கள் இருந்ததோடு 2023 இல் 12512 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9570 அணு ஆயுதங்கள் இராணுவ ரீதியிலான தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு தயாரான 9570 அணு ஆயுதங்கள் - சீனாவின் திட்டம் | China Has Increased The Number Of Nuclear Weapons

அணு ஆயுதம் சார்ந்த பரிசோதனை

அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், வடகொரியாவும் ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனாவிடம் மிகப் பெரியளவிலான அணு ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் கடந்த சில நாட்களாக அணு ஆயுதம் சார்ந்த பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.