விண்வெளியில் முதன்முறையாக மலர்ந்த மலர் – நாசா வெளியிட்ட புகைப்படம்

0
196

விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைய, மனிதர்கள் பிற கிரங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு உதவும் வகையில் சோதனை முயற்சியாக விண்வெளியில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கப்படுகிறது.

விண்வெளியில் தோட்டம்

விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவர வளர்ப்பு சார்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த குறிப்பிட்ட பரிசோதனையை கடந்த 2015-ல் நாசா விண்வெளி வீரர் கேஜெல் லிண்ட்கிரென் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடங்கினார்.

இந்த நிலையில் விண்வெளி வீரர்களுகளின் பரிசோதனை முயற்சியாக தற்போது விண்வெளியில் பூத்த விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.