பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் நுழையும் போலீஸ்; சாணக்கியன்

0
158

நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமாரின் கைதினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என நாடாளுமன்றில் சாணக்கியன் உரையாற்றி உள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

வடக்கு, கிழக்கில் எங்களுடைய இல்லங்களிற்குள் புகுந்து இராணுவ புலனாய்வுத்துறை, பொலிஸ் புலனாய்வுத்துறை மற்றும் பொலிஸார் பல தடவைகளில் என்னுடன் முரண்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர்கள் தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்தாமல் சீருடையின்றி வெள்ளை ஆடைகளில் வந்து இல்லங்களிற்குள் வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் வடக்கு கிழக்கில் வாழும் சாதாரண மக்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்.

இரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டிற்குள் நாங்கள் சி.ஐ .டி, பொலிஸார் என தங்களை அறிமுகம் செய்து கொண்டு செல்வது வழமையாக நடக்கும் ஒரு செயலாக மாறி வருகின்றது.

எங்களுடைய இளைஞர்களை பொலிஸ் பின் தொடர்ந்து சில அச்சுறுத்தல் செய்வது வழமையான விடயம்.

அந்த வகையில் தான் திரு கஜேந்திரகுமார் அன்று நடந்த சம்பவத்தை பற்றி நீங்கள் யார்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்டிருந்தார்.

ஊடகங்களை அடக்கிக் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஊழல்களை வெளிகொண்டு வந்தது ஊடகங்கள் மட்டுமே.

இந்நிலையில் இந்த ஊடகங்களை அடக்கும் வகையில் ஊடக சட்ட மூலம் ஒன்றை கொண்டு வந்து ஊடக சுதந்திரத்தை அடக்குவதால் இந்த நாட்டுக்கு அழிவுகாலம் நெருங்கிவிடும்.

நாட்டில் இடம்பெற்ற உரப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் பிரச்சினை பற்றிய சகல விடயங்களையும் வெளிகொண்டு வந்தது ஊடங்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் இந்த நாடு அழிவு பாதையில் செல்வதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.