கொழும்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்!

0
251

கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்து வரப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்! | Gajendrakumar Mp Kilinochchi Police Station

இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி கைது செய்யும் நடவடிக்கையை தடுக்க முற்பட்ட போதிலும் கஜேந்திரகுமார் எம்.பி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.