இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்ட அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றும் சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கி
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 287.09 முதல் ரூ. 288.06 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 302.53 முதல் ரூ. 303.55 ஆகவும் காணப்படுகிறது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 287.03 முதல் ரூ. 288.78 ஆகவும் ரூ. 300 முதல் ரூ. 301 ஆகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 290 முதல் ரூ. 291 ஆகவும், விற்பனை விலை ரூ. 302 முதல் ரூ. 303 ஆகவும் காணப்படுகிறது.