தனது காதலனை இளம்பெண் ஒருவர் சமையறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே வகோலி என்ற பகுதியில் ராய்சோனி கலூரியில் லாதூர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் அசோக் என்ற 22 வயது இளைஞர் படித்து வந்தார்.
இவருடன் அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த அனுஜா என்ற 21 வயது பெண்ணும் படித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதல் உறவாக மலர்ந்துள்ளது.

திடீரென வாக்குவாதம்
யஷ்வந்த் தனது நண்பர்களுடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில், நான்கு நண்பர்கள் அந்த வீட்டில் வசித்துள்ளனர்.
தனது காதலன் யஷ்வந்த் வீட்டிற்கு அனுஜா அடிக்கடி வருவதை வழக்கமாக கொண்டநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அன்று அனுஜா யஷ்வந்த் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறிய நிலையில், அங்கிருந்த சமையல் அறை கத்தியால் யஷ்வந்த்தை அனுஜா குத்தியுள்ளார்.
பல முறை கத்திக் குத்துக்கு ஆளான யஷ்வந்த் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தில் அனுஜாவின் கைகளிலும் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த காதலன்
கையில் காயங்களுடன் இருந்த அனுஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் இந்த கோர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கத்திக்குத்துக்குள்ளான யஷ்வந்த்தையைும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அனுஜா மருத்துவமனையில் இருப்பதால் அவரை பொலிசார் இன்னும் கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.