காரிலேயே வாழ்க்கையை வாழ்ந்து வரும் கனேடிய பெண்!

0
100

கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய டெஸ்லா காரிலே வாழ்க்கையை வாழ்ந்து வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைந்த செய்துள்ளது.

டிக்டாக் பிரபலமான ஸ்டெபானி என்ற இளம் பெண் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட்டு விட்டு தனது செல்ல பிராணியுடன் காரில் வாழ்ந்து வருகின்றார்.

இவர் சமூக வலைதளத்தில் Little Happy Girl என்ற பெயரில் கணக்குகளை வைத்துள்ளார். இவர் சுதந்திரமாக வசிக்க வேண்டும் என்பதற்காகவே இவர் தனது காரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரிலேயே வாழ்க்கையை வாழ்ந்து வரும் கனேடிய பெண்! ஆச்சரிய சம்பவம் | A Canadian Woman Living In A Car

குறித்த பெண் காரில் வாழ்ந்து வருவதை காணொளியாகவும் பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த காரில் அவருடைய நாய் மற்றும் பூனை படுப்பதற்கான படுகை வசதி, அலங்கார பொருட்கள், வேலைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை தன்னுடைய காரில் அழகாக செட்டப் செய்துள்ளார் என்பதை பார்க்க முடிகிறது.

மேலும் காரின் பின்புறத்தில் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் ஸ்டெபானி வைத்துள்ளார்.

கழிப்பறை வசதிகள் மட்டும் தன்னிடம் இல்லை என்றும் அதற்கு ஜிம்கள், பொது கழிப்பறைகள் மற்றும் மால்களை பயன்படுத்துவதாக ஸ்டெபானி தெரிவித்துள்ளார்.