காலையில் ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு; தென்னிலங்கையில் பரபரப்பு

0
41
A visitor of DVC Indoor Shooting Centre fires a pistol on their range in Port Coquitlam, British Columbia March 22, 2013. The DVC, that has 13 individual shooting lanes, is the only indoor shooting centre in the province that rents firearms to the public without a license. Canada has very strict laws controlling the use of handguns and violent crime is relatively rare. Picture taken March 22, 2013. REUTERS/Andy Clark (CANADA - Tags: SOCIETY) ATTENTION EDITORS: PICTURE 19 OF 24 FOR PACKAGE 'GUN CULTURE - CANADA' SEARCH 'CANADA GUN' FOR ALL IMAGES ORG XMIT: PXP19

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அம்பலாங்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.