மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி-சர்ட்!

0
51

ரொமேனியா நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி சர்ட் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

357 அடி நீளமும் 241 அடி அகலமும் கொண்ட அந்த டி சர்ட் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செயப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரொமேனியா நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்த ஆடை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சாதனை படைத்துள்ள அந்த டி சர்டின் துணியால் 10 ஆயிரம் ஆடைகள் செய்து ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்த சாதனை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.