ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த இந்திய தாய்!

0
53

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனிதா என்ற பெண் ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது உள்ளூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்தது.

இதனையடுத்து அவருக்குப் பிரசவம் பார்க்க போதிய வசதி இல்லாத காரணத்தால் அப்பெண்ணை ராஞ்சி மருத்துவமனைக்குச் செல்ல உள்ளூர் மருத்துவமனை பரிந்துரை செய்தது.

ராஞ்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்

ராஞ்சி மருத்துவமனையில் அந்த தாய்க்கு 5 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றது.

இந்நிலையில் பொதுவாக ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பது 55 மில்லியன் பிரசவத்தில் ஒன்றுதான் நடக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்களில் 7 குழந்தைகள் ஆண்பிள்ளைகள். இது வரை அதுவே உலக சாதனையாக இருந்து வருகிறது.

அதேசமயம் முன்னதாக மாலி நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு 2021-ம் ஆண்டு மே மாதம் 9 குழந்தைகள் பிறந்திருந்தன.