ஈரானின் 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

0
223

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ஆளில்லா விமானங்களை உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்து ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து ட்ரோன்களையும் அழித்ததாகவும், மேற்கு பிராந்தியங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ வசதிகளை தாக்குவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டது என்றும் படை கூறியது.

ஈரானின் 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Shot Down 36 Drones Of Iran

உக்ரைனின் உள்விவகார அமைச்சின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, இந்தத் தாக்குதலை “பாரிய” தாக்குதல் என்று விவரித்தார்.

கடந்த அக்டோபரில் இருந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய மாஸ்கோ, உக்ரைனில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கு ஆளில்லா விமானங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.