தற்போதைய சூழலில் அனைவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், உடற்பருமன் தான்.
உடற்பருமன் பிரச்சினையால் பலரும் தங்களுக்கு விருப்பமான ஆடைகளைக் கூட அணிய முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த உடற்பருமன் ஒருவரது அழகை கெடுக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. உடற்பருமனில் பெருமளவு தாக்கத்தை செலுத்துவது உணவுப் பழக்கமாகும்.
உடற்பருமனை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகள் கைகொடுக்கின்றன என்றபோதும், அதனை தயாரிக்க ஆயுர்வேத வைத்தியங்களும் காணப்படுகின்றன. அதாவது, சோம்பு, பெருஞ்சீரகம்,தனியா போன்ற மசாலா மூலிகைகள் தொப்பையைக் குறைக்க மிகவும் உதவும்.
இனி இந்த மூலிகைப் பொருட்களை வைத்து உடல் எடையைக் குறைக்கும் பொடி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.

பொடி செய்ய தேவையான பொருட்கள்
பெருங்காயம்
சீரகம்
சோம்பு
ஓமம்

எவ்வாறு செய்வது?
பெருங்காயம், ஓமம், சோம்பு, சீரகம் என்பவற்றை சம அளவாக கலந்து கொள்ளவும்.
பொடி செய்து கொள்வதற்கு முன்னர் லேசாக வறுக்கவும்.
பின்னர் காற்றுப் புகாதவாறு ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
எவ்வாறு சாப்பிட வேண்டும்?
காலையில் ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை செலட்களில் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
