உலகிலேயே மிகக் குறைவாக சம்பளம் வழங்கும் நாடு..

0
149

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்குவதாக உலக புள்ளியியல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலக புள்ளியியல் அமைப்பு ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த பலருக்கு அவர்கள் நாடுகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் 23 நாடுகளில் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு, சராசரியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்குகின்றன.

இதனை தொடர்ந்து அந்த வரிசைப்படி சுமார் 10 நாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

அதில், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகக் குறைவாக சம்பளம் வழங்கும் நாடு எது தெரியுமா? சிந்திக்க வைக்கும் சில தகவல்கள் | Country That Pays Low Wages To Workers

நாடுகள் – மாத சம்பளம்

  1. சுவிட்சர்லாந்து – 6,096 டாலர் – ரூ. 4,098,567
  2. லக்ஸம்பர்க்- ரூ.4,10,156
  3. சிங்கப்பூர் – ரூ.4,08,030
  4. அமெரிக்கா – ரூ.3,47,181
  5. ஐஸ்லாந்த் – ரூ. 3,27,716
  6. இந்தியா – ரூ 46,861
  7. சீனா- ரூ.87,246
  8. பங்களாதேஷ் – ரூ.20,584
  9. பாகிஸ்தான் – ரூ.11,858
உலகிலேயே மிகக் குறைவாக சம்பளம் வழங்கும் நாடு எது தெரியுமா? சிந்திக்க வைக்கும் சில தகவல்கள் | Country That Pays Low Wages To Workers

இதனை தொடர்ந்து இந்தியா இந்த நாடுகளில் 65 வது இடத்தை பிடித்துள்ளது. அதிலும் இந்தியாவை விட மிகக்குறைவாக சம்பளம் வழங்கும் நாடுகளும் இருக்கின்றன.

அதில், துருக்கி, பிரேசில்,அர்ஜெண்டினா, கொலம்பியா,பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.