1,000 ஆண்டு பழமையான மாயன் பலகை கண்டுபிடிப்பு!

0
341

பழைமையான பந்து விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட 1,000 ஆண்டு பழைமையான கல்லாலான மாயன் மதிப்பெண் பலகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

40 கிலோகிராம் எடையுள்ள அந்தப் பலகை மாயன் தொல்பொருள் தளமான Chichén Itzá-வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாயன் பலகையில் பழங்காலச் சித்திர எழுத்துகள் உள்ளன.

1,000 ஆண்டு பழைமையான மாயன் பலகை கண்டுபிடிப்பு! | 1 000 Year Old Mayan Scoreboard Discovered

Chichén Itzá தளத்தில் சித்திர எழுத்துகளைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது என்று தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கூறினார். அது கி.பி. 800க்கும் கி.பி. 900க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.

அந்த விளையாட்டு கனமான ரப்பர் பந்தைக் கொண்டு விளையாடப்பட்டதாகவும், அது ஒரு பாரம்பரிய விளையாட்டு எனவும் நம்பப்படுகிறது.