நரிக்குறவர்கள் அவமதிப்பு! வைரலாகும் பவானி சங்கரின் டுவிட்

0
97

நாயகன் சிம்புவின் நடிப்பில் நேற்று வெளியான பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை தியேட்டர் நிர்வாக ஊழியர்கள் அவமதித்த சம்பவம் வைரலானது.

2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் பத்து தல.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், ஒபிலி கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் பத்து தல.

இப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, முதல் காட்சியின் போது தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

இக்காட்சிகளை நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரியா பவானி சங்கர், “எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்குல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல்.

அவங்க உடை தான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், தியேட்டர் ஊழியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.