யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே மாதத்தில் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

0
400

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் போதனா வைத்தியாசாலையில் ஒரே மாதத்தில் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை! | Eye Surgery 700 People At Jaffna Teaching Hospital

ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு கண்சத்திர சிகிச்சை நடைபெறுகின்றது.

யாழ் போதனா வைத்தியாசாலையில் ஒரே மாதத்தில் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை! | Eye Surgery 700 People At Jaffna Teaching Hospital

இதேவேளை, நேற்றையதினம் (30-03-2023) வவுனியாவை சேர்ந்த 49 பேர் அழைத்துவரப்பட்டு வைத்திய நிபுணர் Dr.M.மலரவன் மற்றும் போதனா வைத்தியசாலை கண் சத்திர சகிச்சை நிபுணர்கள் மற்றும் மன்னார் வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளடங்களாக வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் குழாம் வெற்றிகரமாக இந்த சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

யாழ் போதனா வைத்தியாசாலையில் ஒரே மாதத்தில் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை! | Eye Surgery 700 People At Jaffna Teaching Hospital

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மேற்படி நிறுவனங்களின் உதவியோடு கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. M. மலரவன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பான தகவலை முகநூலில் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.