தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

0
272

பஸ்ஸில் குண்டு வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கொழும்பு ஹோர்டன் சுற்றுவட்டத்தில் பயணிகள் பேருந்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நாகலிங்கம் மதனசேகரன் என்ற பிரதிவாதிக்கே இவாறு கடூழிய தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திறந்த பிடியாணை

அதேவேளை இதே குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்தை புறக்கணித்து வரும் மற்றுமொரு பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.