மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பெரும் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண்

0
271

மட்டக்களப்பில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் இன்றைய தினம் (26-03-2023) காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பெரும் பரபரப்பு: சடலமாக மீட்கப்பட்ட பெண் | Woman Found Dead Body In Gandhi Park Batticaloa

சடலத்தினை மரண விசாரணையை தொடர்ந்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.