பாறைகளுக்கிடையில் வாளொன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மொரட்டுவை மோசஸ் வீதி, எகொடஉயன கடற்பரப்பில் இன்று (26) வாளொன்று கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாள் நபரொருவரின் கையை வெட்டி துண்டாடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த வாளினால் ஒருவரின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாடி அந்தக் கைகளை அக்கடலில் வீசியதாக விசாரணையின்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சந்தேக நபருக்கு அடைக்கலம் அளித்த 33 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.