மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி , ஸ்டாய்னிஸ்.. நடந்தது என்ன ? வைரல் வீடியோ

0
312

விராட் கோலி மற்றும் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் களத்தில் மோதிகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

India Vs Aus

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது மற்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்யாசத்தில் தொடரை கைபற்றியது.

விராட் கோலி மோதல்

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , குறிப்பாக இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 21 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீசிவிட்டு நடந்து வந்தார் .

அப்போது எதிரே விரட்கோலி வரவே இருவரும் எதிர்பாரதவிதமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர் இதனை பார்த்த ரசிகர்கள் ஆராவாரம் எழுப்ப தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது