மனைவி மகாலட்சுமியின் பிறந்த நாளை தயாரிப்பாளர் ரவீந்தர் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
மகாலட்சுமி பிறந்தநாள்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். சமீபத்தில் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகான மனைவி மகாலெட்சுமியின் பிறந்தநாளை ரவீந்தர் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம்
ரவீந்தர் உருக்கம்
அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த ‘மல்லிகை பூ’. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது
இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான
இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi..Happy birthday எனக் குறிப்பிட்டுள்ளார்.