வேற வேலை இல்லை ஏதாச்சும் உளறிக்கிட்டே இரு; தரமான பதிலடி கொடுத்த விஜே மணிமேகலை

0
353

ட்விட்டரில் தன்னை விமர்சனம் செய்தவற்கு விஜே மணிமேகலை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

விஜே மணிமேகலை 

யூடியூப் வீடியோக்கள் மூலமாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் விஜே மணிமேகலை . ஆரம்பாகாலத்தில் சன்மியூசிக்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், அப்போது நடன இயக்குநர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்ப காலத்தில் பிரபல நடன இயக்குநர் நடிகர் லாரன்ஸிடம் நடன உதவியளராக இருந்த ஹூசைனுக்கும் மணிமேகலைக்கும் காதல் மலர்ந்தது, ஆனால் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களது வீட்டில் பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிக்கவில்லை. 

வேற வேலை இல்லை ஏதாச்சும் உளறிக்கிட்டே இரு : ஒரே பதிலால் அதிர வைத்த விஜே மணிமேகலை | Vj Manimegalai Reply To Netizen Controversy

குடும்பத்தின் எதிரிப்பை கடந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட போது மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் நானும் ஹுசைனும் திருமணம் செய்து கொண்டோம். அப்பாவிடம் பேச புரிய வைக்க முடியாததால் திடீரென ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டோம். எங்கள் குடும்பத்தினர் ஒருநாள் புரிந்து கொள்வார்கள். காதலுக்கு மதம் தேவையில்லை. எனக்கு ஸ்ரீராம ஜெயமும் அல்லாவும் ஒன்றுதான் என்று இருவரும் திருமண புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.

வேற வேலை இல்லை ஏதாச்சும் உளறிக்கிட்டே இரு : ஒரே பதிலால் அதிர வைத்த விஜே மணிமேகலை | Vj Manimegalai Reply To Netizen Controversy

இதற்கு இணையவாசி ஒருவர்எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? லவ் ஜிகாத். மதமென பிரிந்தது போதும் என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இதற்கு மணிமேகலை தனது பதில் பதிவில் இப்படி உளறிக்கிட்டே இருக்குறதுக்கு போய் உருப்படுற வேலையை பார்க்கலாம்ல என  பதிலடி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்டு செய்து வரும் நிலையில் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.