இளைஞரின் கொடுஞ்செயல்; பறிபோன மூன்று உயிர்கள்

0
251

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கூரான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி மூன்று கொலை செய்த இளைஞரை பொலிசார் சம்பவயிடத்திலேயே கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் 19 வயதான ஆர்தர் கலர்னேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

கலர்னேவ் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மூவரும் தொடர்புடைய சந்தேக நபரும் அறிமுகமானவர்கள் என்றே தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது பகல் 9.20 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளதாகவும், பெலங்கர் தெரு பகுதியில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் கொடுஞ்செயல்... பறிபோன மூன்று உயிர்கள்: வெளியான புகைப்படம் | Montreal Stabbed Death Teen Arrest

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு, அங்கே மூவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதை உறுதி செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த மூவரும் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் தான், சந்தேக நபரை பொலிசார் கடும் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.