கனேடிய சிறைக்கு கழுத்தில் பையுடன் செல்லும் புறா.. காரணம் தெரியுமா?

0
257

கனடாவின் சிறைச்சாலைக்கு புறாவொன்று கழுத்தில் பையுடன் சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு இவ்வாறு புறா சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய சிறைக்கு கழுத்தில் பையுடன் செல்லும் புறா? | Pigeon Wearing Tiny Backpack Found

அண்மையில் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட இரண்டாவது புறா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்கு போதைப் பொருளை கடத்தவதற்காக இந்தப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்ஸ் கொலம்பியாவின் ப்ரேசர் வெலியின் மாட்ஸ்க்யூ சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் பாலர் பாடசாலையொன்றும் காணப்படுவதாகவும், போதைப் பொருட்கள் பாடசாலைக்குள் வீழ்ந்தால் ஆபத்தாக அமையக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போதைப் பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.