தாய்லாந்தில் கைதான பிரித்தானியாவின் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்!

0
151

பிரித்தானியாவின் மோஸ்ட் வாண்டட் கைதியாக அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் தாய்லாந்து அதிகாரிகளால் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் 5 வருடங்கள் தலைமறைவாக இருந்த போதைப் பொருள் கடத்தல் தலைவன் ரிச்சர்ட் வேக்கலிங் (55) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ரிச்சர்ட் வேக்கலிங் 2016 ஆம் ஆண்டில் 8 மில்லியன் பவுண்டுகள் ($9.6 மில்லியன்) மதிப்புள்ள திரவ ஆம்பெடமைன் என்ற போதைப் பொருளை கடத்த முயன்ற பின்னர் 2018 இல் பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

இந்த கடத்தல் தொடர்பான குற்ற வழக்கில் ரிச்சர்ட் வேக்கலிங்-க்கு 11 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் பிரித்தானிய தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மோஸ்ட் வாண்டட் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் தென்கிழக்கு பிரித்தானியாவில் உள்ள எசெக்ஸ் கவுண்டியை சேர்ந்த வேக்லிங் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை NCA உடன் பணிபுரியும் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டார்.

ரிச்சர்ட் வேக்கலிங் 1993 ஆம் ஆண்டு முதல் அவர் தாய்லாந்துக்கு தவறாமல் பயணம் செய்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பிறகு அவர் தனது பெயரையும் பாஸ்போர்ட்டின் குடியுரிமையையும் ஐரிஷ் என்று மாற்றினார். அதனால்தான் அது கணினியில் காட்டப்படவில்லை என்று கைது செய்யப்பட்ட மூத்த தாய்லாந்து காவல்துறை அதிகாரி AFP இடம் தெரிவித்தார்.

மேலும் “நாங்கள் அவரைக் கைது செய்து வாரண்டில் இருப்பது ரிச்சர்ட் தானா என்று கேட்டோம். அவர் அதை உறுதிப்படுத்தினார்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இதன்படி ரிச்சர்ட் வேக்கலிங் பல ஆண்டுகளாக ஹுவா ஹின் என்ற கடலோர ரிசார்ட்டில் வசித்து வந்ததாகவும் அவரை ஒப்படைப்பதற்கான செயல்முறைகள் தொடங்குவதற்காக திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.