துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்பு!

0
389

துருக்கியில் நில நடுக்க இடிபாடுகளில் இருந்து 128 மணித்தியாலத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்க இடிபாடுகளை வேகமாக அகற்றினர். சில வீரர்கள் இடிபாடுகளுக்குள் சென்று பார்த்தனர்.

துருக்கில்128 மணித்தியாலத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை! | Baby Rescued Alive After 128 Hours In Turkey

பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை 128 மணித்தியாலத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உடனே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆகிறது.

துருக்கில்128 மணித்தியாலத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை! | Baby Rescued Alive After 128 Hours In Turkey

அந்த குழந்தையை மீட்கப்பட்ட போது அங்கிருந்த மீட்புக்குழுவினர் பொது மக்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மேலும் குறித்த குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.