புலி சடலமாக இருப்பதை முதலில் பார்த்த நபர் தற்கொலை!

0
165

கேரளாவில் புலி சடலமாக கிடப்பதை பார்த்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புலி சடலம்

வயநாட்டை சேர்ந்தவர் குஸ்விலா ஹரிகுமார். இவர் புலி ஒன்று சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் ஹரிகுமார்.

இது குறித்து ஹரிகுமாரின் அக்கம்பக்கத்தினர் கூறுகையில், புலி இறந்து கிடப்பதைப் பார்த்த ஹரிகுமாரை வனத்துறையினர் பலமுறை விசாரணைக்காக மேப்பாடி ரேஞ்ச் அலுவலகத்திற்கு அழைத்தனர். தொடர்ந்து அவரை மிரட்டி வந்ததால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மனைவி குற்றச்சாட்டு

ஹரிகுமார் மனைவி உஷா கூறுகையில், வழக்கில் சிக்க வைப்பதாக வன அதிகாரிகள் மிரட்டியதாகவும், அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் ஹரிகுமாரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய ஒருமுறை மட்டுமே வன அலுவலகத்திற்கு வர வழைக்கப்பட்டார் என கூறினார்.

இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தலைமை வனத்துறை அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.