சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனில் வேவு பார்க்கும் கருவிகள்

0
286

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் கண்காணிப்பு பலூனில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனபலூனில் உளவு செயற்பாட்டு கருவிகளின் பல் அன்டெனா திறனுடனான உபகரணங்கள் இருந்தது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பலூன் தொடர்பில் சீனாவை கண்டிக்கும் கடப்பாடற்ற தீர்மானம் ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

உளவு பார்க்கும் நோக்கத்துக்காக இந்த பலூன் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளதுடன் அந்த பலூனில் காலநிலை கண்காணிப்பு கருவிகளே இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது ஐந்து கண்டங்களை உள்ளடக்கிய கண்காணிப்பு பலூன்களில் ஒன்று என்று அமெரிக்கா நம்புகிறது.