வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பம்!

0
128

கிளிநொச்சி பரந்தன் சந்தியிலிருந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அத்தோடு இப்பேரணி பரந்தன் வீதிவழியாக முல்லைத்தீவை நோக்கி நகர்ந்துள்ளது.

பேரணியின் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தியவர்கள் புகைப்படம் எடுத்து மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதோடு மேலும் பேரணியை பின்தொடர்ந்த வண்ணம் கிளிநொச்சி நகரில் இருந்து பரந்தன் வீதி வழியாக இரண்டு உந்துருளிகளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பம் | Rally From North To East

இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சிவில் உடைதரித்தவர்களை நீங்கள் எந்த ஊடகம் ஏன் எடுக்கிறீர்கள் என வினவியதற்கு தாம் “ஹிரு” என பொய் கூறிவிட்டு தொடர்ந்தும் அச்சுறுத்தும் பாணியில் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.