இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களால் நேற்றையதினம் நடத்தப்பட்ட பேரணி யாழ்ப்பாணத்திலிருந்து பயணமானது.
அப்போது அப்பகுதியாக வந்த யாழ்.மாவட்டச் செயலரின் வாகனம் நின்று பேரணி கடந்து சென்றதன் பின்பே அங்கிருந்து சென்றுள்ளது. பேரணி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த வீதியால் வந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வாகனத்தை நிறுத்தியதுடன், தனது வாகனத்தின் முன் பக்கத்தில் இருந்த அரச அதிபர் என்ற காட்சிப்படுத்தல் பலகையை நீக்கி பேரணி விலகும் வரைக்கும் காத்திருந்தார்.
அதன் பின்னர் பேரணி கடந்து சென்ற பின்பே அங்கிருந்து விலகிச் சென்றிருந்தார். இவ்நிலையில் யாழ்.மாவட்டச் செயலரின் செயற்பாடு தொடர்பில் அங்கு நின்றவர்கள் பலரும் பாராட்டைத் தெரிவித்தனர்.