6 வயது மகனிடம் செல்போன் கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சி!… 3.5 லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர்

0
341

6 வயது சிறுவன் அப்பாவின் ஃபோனில் 3.5 லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தினான்.

6 வயது சிறுவன்

இன்றைய காலத்தில் குழந்தைகள் ஸ்மார்ட் போன் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். சிறு குழந்தைகள் போனில் வீடியோக்களைப் பார்க்கவும், கேம் விளையாடவும் கேட்டால் பெற்றோர்கள் எளிமையாக கொடுத்து பில்லைகளை கெடுப்பதை பார்க்கிறோம். அப்படி கொடுக்கும்போது, கேம் விளையாடுவது மட்டுமில்லால், மொபைலில் இருக்கும் அனைத்து செயலிகளும், விடயங்களும் குழந்தைகளுக்கு அத்துபடியாகிவிடுகிறது.

அப்படி ஒரு அப்பா தனது 6 வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கேம் விளையாடுவதற்காகத் தனது போனை வழக்கமாகக் கொடுத்துள்ளார். அனால் அதுவே அவருக்கு வினையாக மாறியது.

ரூ. 3.7 லட்சத்திற்கு உணவு ஆர்டர்

சிறுவன் கேம் விளையாடுவதற்குப் பதிலாக, உணவு டெலிவரி செயலியைத் திறந்து பல்வேறு உணவகங்களிலிருந்து ஏராளமான உணவை ஆர்டர் செய்தான், இதன் விளைவாக $1000 (இலங்கை பணமதிப்பில் ரூ. 3.7 லட்சம்) பணம் தந்தையின் கணக்கிலிருந்து பறிபோனது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் Chesterfield நகரத்தில் சனிக்கிழமை நடந்தது.

சிறுவன் Grubhub எனும் உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து அந்த உணவை ஆர்டர் செய்தான். அந்த நேரத்தில், அவரது தந்தை Keith Stonehouse, மகன் போனில் விளையாடுவதாகக் கருதினார்.

கேம் விளையாட 6 வயது மகனிடம் செல்போன் கொடுத்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி! | 6 Year Old Boy Orders Food Dads Phone Shocking

சிறுவன் ஒவ்வொரு ஆர்டருக்கும் 25% டிப்ஸ் கொடுத்தான்! வீட்டு வாசலில் மணி அடித்து, ஒன்றன் பின் ஒன்றாக உணவு விநியோகம் வந்தபோதுதான், ஏதோ நடந்து கொண்டிருப்பதை கீத் உணர்ந்தார்.

அடுத்தடுத்து வந்து இறங்கிய விதவிதமான உணவுகள்

முதலில் ஹேப்பி’ஸ் உணவகத்தில் இருந்து சில இறால் உணவு வந்தது, பிறகு ஷவர்மாவில் இருந்து சிக்கன் பிடா சாண்ட்விச்கள் மற்றும் லியோவின் ஐஸ்கிரீம். ஜம்போ இறால், சாலடுகள், சில்லி சீஸ் பிரைஸ், ஐஸ்கிரீம், திராட்சை இலைகள், சோறு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உணவுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன!

ஒரு கார் வந்தது, அதிலிருந்து ஒரு பெரிய பார்சல் இறக்கிவைக்கப்பட்டு, ஓட்டுநர் தந்நு அழைத்ததாக கீத் கூறினார். அவரது மனைவி ‘A Slice of Heaven Cakes” எனும் பேக்கரியை நடத்துவதால், யாரோ அவளிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய அலங்காரப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர் என்று நினைத்தேன். ஆனால், பிறகு தான் தெரிந்தது, அது Leo’s Coney Island-லிருந்து வந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

தொடர்ந்து இதேபோல் கார்கள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தன, அதில் பார்சல்கள் வந்துகொண்டே இருந்தன. எதேச்சையாக நான் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தேன், அதிர்ச்சிச்சி அடைந்தேன் என்று கீத் கூறினார்.

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, Grubhub ஆப் கீத் ஸ்டோன்ஹவுஸ் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு $1,000 பரிசு அட்டையை வழங்கியது.